search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி தொகுதி"

    • எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது.
    • அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார்.

    தூத்துக்குடியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    திமுக எம்.பிக்கள் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கவில்லை. மக்களுக்கு பாதிப்பு என்றால் அரசு ஓடோடி வந்து உதவி செய்ய வேண்டும்.

    அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மக்கள் வெள்ளத்தில் தூத்துக்குடி பாதிப்படைந்தபோது நான் தான் வந்தேன்.

    புயல், வெள்ளத்தின்போது திமுக அரசு துரிதமாக செயல்படவில்லை.அதிமுக பற்றி முதலமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ளது அதிமுகவா? திமுகவா?

    நாங்கள் நினைத்து இருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்போம். ஆனால் தேவையில்லை.எங்களுக்கு பதவி பெரிதல்ல, மக்கள் தான் பெரிது. தமிழக மக்களுக்கான திட்டங்கள், நிதிகளை பெறுவோம்.

    மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தான் அதிமுகவின் லட்சியம். ஆட்சி அதிகாரத்திற்காக திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

    தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் வெற்றி உறுதி. 2026-ல் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தின்போது கல்லை காண்பித்தார். அப்போது, மோடியுடன் நான் இருக்கும் படத்தை காண்பித்து பல் தான் தெரிகிறது என்று கூறினார்.

    சிரித்தால் பல் தானே தெரியும். உதயநிதி ஸ்டாலின், முக ஸ்டாலின் மோடியுடன் சிரித்து பேசும் இந்த படங்களில் என்ன தெரிகிறது?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7-வது தெருவில் உள்ள சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட்டுகளில் ஒவ்வொரு கடையாக சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு லயன்ஸ் டவுன் பகுதிக்கு சென்றார். அப்போது 7-வது தெருவில் உள்ள சூசை தப்பாசு என்ற மீனவர் வீட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார்.

    அங்கு மீனவரின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரது வீட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டீ குடித்தவாறு அவர்களிடம் வாக்கு கேட்டார்.

    அப்போது முதலமைச்சர் கூறும்போது, கனி மொழி எம்.பி., உங்கள் வீட்டு பிள்ளை அவரை மறந்து விடாதீர்கள். பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லயன்ஸ் டவுன் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் வீதி வீதியாக சென்று ஆதரவு திரட்டினார். அப்போது முதலமைச்சருடன் ஏராளமானோர் 'செல்பி' எடுத்துக்கொண்டனர்.

    • பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர்.

    தூத்துக்குடி:

    பாராளுமன்ற தேர்தலை யொட்டி தி.மு.க. மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    நேற்று நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நேற்று நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி சென்றார். நேற்று இரவு சத்யா ரிசார்ட்டில் ஓய்வெடுத்தார்.

    வழக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் அதிகாலையில் அங்குள்ள சாலைகளில் நடைபயிற்சி செய்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடம் வாக்கு சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று காலை 7.35 மணிக்கு ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டார்.

    தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே உள்ள ராஜாஜி பூங்காவையொட்டிய சாலைகள் வழியாக சென்று தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

    தொடர்ந்து பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட்டுக்குள் சென்றார். அப்போது ஒவ்வொரு கடைகளாக சென்று வியாபாரிகளிடம் நலம் விசாரித்து தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார். மேலும் காய்கறி வாங்க வந்து பொதுமக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை கேட்டு வாக்கு சேகரித்தார்.

    அப்போது பொதுமக்கள், வியாபாரிகளிடம் அங்கு நின்ற கனிமொழி எம்.பி.யை காண்பித்து இவர் யார் என்று தெரிகிறதா என்று கேட்டார். அதற்கு அவர்கள் கனிமொழி எம்.பி. எனவும், தொகுதி வளர்ச்சிக்கு நன்றாக செயல்படுவதாகவும் கூறினர்.

    அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் யாருக்கு வாக்களிப்பீர்கள் என கேட்டபோது தி.மு.க.விற்கு என பதில் கூறினர். அப்போது மறக்காமல் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி.க்கு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

    தொடர்ந்து அவர் நடைபயணமாக மார்க்கெட் முழுவதும் சென்று பின்னர் அருகில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு சென்றார். அங்கு நின்றிருந்த இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என ஏராளமானோர் முதலமைச்சருக்கு கை கொடுத்தனர். அப்போது அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என நலம் விசாரித்தவாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பார்த்தவுடன் ஏராளமான பொதுமக்களும், வாலிபர்களும், இளம்பெண்களும் ஆர்வமுடன் தங்களது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர்.

    புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் பொறுமையுடனும், சிரித்த முகத்துடனும் நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார்.

    அப்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தி.மு.க.வினர் உடன் இருந்தனர். 

    • இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க.-கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளரையும் அறிமுகப்படுத்தி சூறாவளி பிரசாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நெல்லை, கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று மாலை நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.

    இந்த 2 தொகுதிகளும் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திறந்த வெளி மேடையில் வைத்து 2 தொகுதிக்கான வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

    இதற்காக அவர் இன்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகிறார். தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து கார் மூலமாக பிரசார கூட்டம் நடைபெறும் நாங்குநேரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். அங்கு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி ஆதரவு திரட்டி பேசுகிறார்.


    நாங்குநேரியில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும் மேடையின் முகப்பு பகுதி பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. நான்குவழிச்சாலையில் இருபுறமும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினரின் கொடிகள் நடப்பட்டுள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனையின் பேரில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் உற்சாகமுடன் செய்து வருகின்றனர்.

    நாங்குநேரி கூட்டம் முடிந்ததும் முதலமைச்சர் மீண்டும் சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு சென்று. அங்குள்ள தனியார் விடுதியில் இரவில் தங்குகிறார். மீண்டும் நாளை மாலை அங்கிருந்து புறப்பட்டு சாலை மார்க்கமாக எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை செல்கிறார்.

    அங்கு தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சி வேட்பாளர் ஆகியோரை அறிமுகம் செய்து வைத்து மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு விருதுநகர் செல்லும் மு.க.ஸ்டாலின் அங்கு இரவில் தங்குகிறார். முதலமைச்சர் வருகையையொட்டி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    ×